×

கோணை கிராமத்தில் டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு

விழுப்புரம், அக். 30: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கோணை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளின் அருகில் அரசு டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்து அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதையறிந்ததும்  நாங்கள் அனைவரும் சென்று கேட்டதற்கு கோழித்தீவனம் வைப்பதற்காக கட்டுகிறோம் என்று மழுப்பலாக பதில் கூறுகின்றனர்.ஆனால் அந்த கட்டிடத்தில் டாஸ்மாக் கடை திறக்கத்தான் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் மது குடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபடக்கூடும். இதனால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நேரிடும். மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மெயின் ரோட்டுக்கு செல்லும் வழியிலும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லும் வழியில்தான் டாஸ்மாக் கடை கட்டி வருகின்றனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருதி எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags : village ,Kovin ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...